பயிர்களுக்கு ஏன் மண்புழு உரத்தை வாங்கி உபயோகிக்க கூடாது..???


பொதுவாக மண்புழு உரமானது பிராய்லர் கோழி அரக்கன் மற்றும் HF JERSEY வகை பன்றிகளை போன்றதேயாகும்.
மற்றும் மண்புழு உரம் தயாரிப்பவர்கள் யாரும் நாட்டுமாட்டு சாணத்தை உபயோகிப்பதில்லை மாறாக பணம் ஈட்டும் பொருட்டு கலப்பினப் பன்றிகளின் எச்சத்தின் மூலமாக தயார் செய்கிறார்கள். கலப்பினப் பன்றிகளின் சாணத்தில் சில லட்சம் என்ற எண்ணிக்கையிலே நுண்ணுயிர்கள் காணப்படும். ஆனால் நாட்டு மாட்டு சாணத்திலோ பல கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல் மண்புழு உரத்தை மண்ணில் கொட்டும் போது அதில் உள்ள மண்புழுக்களால் மண்ணை கீழும் மேலூமாக துளைபோட்டு கொண்டு மண்ணை வளப்படுத்த முடிவதில்லை ஏனென்றால் இவைகள் கலப்பினப் பன்றிகளின் எச்சத்தை மட்டுமே துளையிட்டு வாழப்பழகியவை மற்றும் இவை நிழல் வலையின் நிழலில் குளிர்ச்சியான சூழ்நிலையில் மட்டுமே வாழப்பழகியவை எனவே இவற்றால் மண்ணை துளையிட்டு மண்ணை 100% வளப்படுத்த முடியாது தோழமைகளே???? மண்ணில் கொட்டப்பட்ட சில மணித்துளிகளிலோ அல்லது ஒரிரு நாட்களிலோ இவைகள் இறந்து விடும்.
ஆகையால் மண்புழு உரத்தை வாங்கி உயயோகிப்பதால் பெரிய அளவு பயன் இல்லை மாறாக நாட்டு மண்புழு வாழும் சூழ்நிலையை மண்ணில் நாம் உருவாக்க வேண்டும். அதாவது அவை சமாதி நிலையில் இருந்து உயிர் உள்ள நிலைக்கு வரவேண்டும்.
அது தான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தின் நான்கு சக்கரங்கள் ஆகும். அவையாவன
1. பீஜாமிர்தம் - விதைகளை இதில் உரவைத்து பயிர் செய்ய வேண்டும்.
2. ஜீவாமிர்தம் - பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். ஆதாவது மண்ணின் தன்மையை மாற்றி மண்புழுக்களை மேலே வரத்தூண்டுகிறது.
3. மூடாக்கு - மண்பகுதிகளை இலை,தலை & செத்தைகளை கொண்டு மூடாக்கு செய்தல் மற்றும் ஊடு பயிர்கள் மூலம் உயிர் மூடாக்கு செய்தல்.
4. வாப்சா - மேற்கூரிய முன்று சரியாக நடக்கும் போது மண்ணில் உருவாகும் மற்றும் வளமாகும் நிலையேயாகும். அதாவது மண்புழு மண்ணில் உயிர்வாழும் சூழ்நிலையே வாப்சாவாகும்.
இத்தனை விசயங்கள் சரிவர நடந்தாலே நாம் மண்புழுக்களை மண்ணின் மேல் பரப்பில் காண முடியும். மாறாக நீங்கள் எவ்வளவு மண்புழு உரத்தை மண்ணில் கொட்டினாலும் மண் நிரந்தரமாக வளமாகாது மற்றும் வளப்படுத்த இயலாது தோழமைகளே.???
சுபாஷ் பாலேக்கர் கூறுவது:-
ஒரு விவசாயி, ஒரு நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏக்கர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்”
இது எப்படி முடிகிறது?
அவர் கூறுகிறார் ” பயிர்கள் மண்ணில் போடும் உரங்களில் இருந்து 2% மட்டுமே எடுத்து கொள்ளுகிறது. மற்ற 98% பங்கும் காற்று, நீர், மற்றும் சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறது.
இந்த மற்றதை செய்வது மண்ணில் உள்ள நுண் யிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் கொல்ல படுகின்றன.
இயற்கையாக, மண்ணில் நுண் இயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசு சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள் இருக்கின்றன.
மண்ணின் நலத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான ஆராய்சிகளை செய்து உள்ளார். வெல்லம, சுண்ணாம்பு போன்றவையும் அவர் பயன் படுத்துகிறார். நாட்டு பசு தான் சரியாக வரும்” என்கிறார் அவர்.
வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட Eisenia foetida என்ற மண் புழு பற்றியும் அவர் குறை கூறுகிறார்.
இந்த மண் புழுக்கள் மண்ணில் உள்ள நுண் உயிரிகளை உண்டு விடுவதால், பயிர்கள் பாதிக்க படுகின்றன என்கிறார் அவர்.
திரு சுபாஷ் பலேகர் அவர்களின் மண்புழு பற்றிய டிப்ஸ்:
மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும். காசில்லாமல் வேலையைச் செய்யும் ஆட்கள் தான் இந்த மண்புழுக்கள்.
மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன.
மேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன.
மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டு மாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு.
இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்து விட்டாலே போதும். நம் பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும்.
பொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும்.
பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன.
மண்புழுக்களின் உடல் மீது நீர்ப்பட்டால் அதுவும் உரமாக மாறி விடும். இதை வெர்மிவாஷ் என்று சொல்கிறார்கள்.
பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாக காய்ப்பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த வெர்மிவாஷீக்கு உண்டு.
மண்ணில் இயற்கையாகவே உள்ளச் சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்து சேர்க்கின்றன.
சுமார் 15 அடி ஆழம் வரை அவை சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது.
மண்ணிற்கு அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து இரும்பு, 10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மேலேக் கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன.
ஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருக்கும்.
ஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை, 120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன் வரை காய்கறி, பழங்கள் என்ற எல்லாமும் விளைந்து கொழிக்கும்.
மண்புழுக்களை அதிகமாகப் பெருக்கவேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். நாட்டு மாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும். நாட்டு மாடு நாள் ஒன்றுக்கு 11 கிலோ சாணம் கொடுக்கும். இதை வைத்து 30 ஏக்கர் நிலம் முழுக்க விவசாயம் செய்ய முடியும்.
மாட்டின் சிறுநீர், நாளாக நாளாகத்தான் அதிகப் பலன் கொடுக்கும். பொதுவாகச் சாணத்தை 7 நாட்களுக்குள் பயன்படுத்தினால் தான் பலன் உண்டு. ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 லிட்டர் கோமியம் இருந்தாலே போதுமானது என்கிறார் பாலேக்கர் அவர்கள்.
நன்றி.

Comments